caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Anfaal அத்தியாயம், வசனம் 62

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 88 · 8:62

وَإِن يُرِيدُوٓا۟ أَن يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ ٱللَّهُ هُوَ ٱلَّذِىٓ أَيَّدَكَ بِنَصْرِهِۦ وَبِٱلْمُؤْمِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அவர்கள் உம்மை வஞ்சிக்க நாடினால் நிச்சயமாக உமக்குப் போதுமானவன் அல்லாஹ்தான். அவன் உம்மை தன் உதவியைக் கொண்டும் நம்பிக்கையாளர்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நபியே!) அவர்கள் உம்மை ஏமாற்ற நாடினால் நிச்சயமாக உமக்குப் போதுமானவன் அல்லாஹ்தான். அவன், தன் உதவியைக் கொண்டும் நம்பிக்கையாளர்களைக் கொண்டும் உம்மை பலப்படுத்தி இருக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi62. (நபியே!) அவர்கள் உமக்கு சதி செய்யக் கருதினால் (உம்மைப் பாதுகாக்க) நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவனாக இருக்கிறான். அவன்தான் உம்மை தன் உதவியைக் கொண்டும் நம்பிக்கையாளர்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70