caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Naba அத்தியாயம், வசனம் 40

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 80 · 78:40

إِنَّآ أَنذَرْنَٰكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமனிதன் தனது இரு கரங்கள் முற்படுத்தியவற்றைப் பார்க்கின்ற நாளில் (நிகழ இருக்கின்ற) சமீபமான ஒரு வேதனையைப் பற்றி நிச்சயமாக நாம் உங்களை எச்சரித்தோம். இன்னும் (அந்நாளில்) நிராகரிப்பாளன் நான் மண்ணாக ஆகவேண்டுமே என்று கூறுவான்.
Tamil Translation - Omar Sharifமனிதன் தனது இரு கரங்கள் முற்படுத்தியவற்றைப் பார்க்கிற நாளில் (நிகழ இருக்கிற) சமீபமான ஒரு தண்டனையைப் பற்றி நிச்சயமாக நாம் உங்களை எச்சரித்தோம். இன்னும் (அந்நாளில்) நிராகரிப்பாளன் கூறுவான்: “நான் மண்ணாக ஆகிவிடவேண்டுமே” என்று.
Tamil Translation - Abdulhamid Baqawi40. சமீபத்தில் நிச்சயமாக உங்களுக்கு வரக்கூடிய ஒரு வேதனையைப் பற்றி நாம் எச்சரிக்கை செய்கிறோம். அந்நாளில் ஒவ்வொரு மனிதனும் தன் கரங்கள் செய்த செயலின் பலனை(த் தன் கண்ணால்) கண்டுகொள்வான். நிராகரிப்பவனோ தான் மண்ணாக ஆகவேண்டுமே என்று புலம்புவான்!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70