إِلَّا بَلَٰغًا مِّنَ ٱللَّهِ وَرِسَٰلَٰتِهِۦ وَمَن يَعْصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ فَإِنَّ لَهُۥ نَارَ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآ أَبَدًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(எனினும்,) அல்லாஹ்விடமிருந்து (செய்திகளை) எடுத்துரைப்பதற்கும் அவனுடைய தூதுத்துவ செய்திகளுக்கும் தவிர (வேறு எதற்கும் நான் உரிமை பெற மாட்டேன்). எவர் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறு செய்வாரோ நிச்சயமாக அவருக்கு நரக நெருப்புதான் உண்டு. அதில் அவர்கள் எப்போதும் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
Tamil Translation - Omar Sharif(எனினும்,) அல்லாஹ்விடமிருந்து (செய்திகளை) எடுத்துரைப்பதற்கும் அவனுடைய தூதுத்துவ செய்திகளுக்கும் தவிர (வேறு எதற்கும் நான் உரிமை பெற மாட்டேன்). எவர் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறு செய்வாரோ நிச்சயமாக அவருக்கு நரக நெருப்புதான் உண்டு. அதில் அவர்கள் எப்போதும் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi23. ஆயினும், அல்லாஹ்விடமிருந்து (எனக்குக் கிடைத்த) அவனுடைய தூதை எடுத்துரைப்பதைத் தவிர (எனக்கு வேறு வழியில்லை.) ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறுசெய்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக நெருப்பு தான் (கூலியாகும்). அதில் அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள்.