وَأَنَّا لَمَّا سَمِعْنَا ٱلْهُدَىٰٓ ءَامَنَّا بِهِۦ فَمَن يُؤْمِنۢ بِرَبِّهِۦ فَلَا يَخَافُ بَخْسًا وَلَا رَهَقًا
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக நாங்கள் நேர்வழியை செவியுற்ற போது நாங்கள் அதை நம்பிக்கை கொண்டோம். எவர் தன் இறைவனை நம்பிக்கை கொள்வாரோ அவர் (தனது நன்மைக்குரிய கூலி) குறைவதையும் (தான் செய்யாத குற்றத்தை தன் மீது சுமத்தப்படுகின்ற) அநியாயத்தையும் அவர் பயப்படமாட்டார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நிச்சயமாக நாங்கள் நேர்வழியை செவியுற்றபோது நாங்கள் அதை நம்பிக்கை கொண்டோம். ஆக, எவர் தன் இறைவனை நம்பிக்கை கொள்வாரோ அவர் (தனது நன்மைக்குரிய கூலி) குறைவதையும் (தான் செய்யாத குற்றத்தை தன் மீது சுமத்தப்படுகின்ற) அநியாயத்தையும் பயப்படமாட்டார்.
Tamil Translation - Abdulhamid Baqawi13. (இந்த குர்ஆனிலுள்ள) நேரான வழிகளைச் செவியுற்றபோதே அதை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எவன் தன் இறைவனை நம்பிக்கை கொள்கிறானோ, அவன் நஷ்டத்தைப் பற்றியும், துன்பத்தைப் பற்றியும் பயப்படமாட்டான்.