بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ قُلْ أُوحِىَ إِلَىَّ أَنَّهُ ٱسْتَمَعَ نَفَرٌ مِّنَ ٱلْجِنِّ فَقَالُوٓا۟ إِنَّا سَمِعْنَا قُرْءَانًا عَجَبًا
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக ஜின்களில் சில நபர்கள் (நான் குர்ஆன் ஓதுவதை) செவியுற்றனர் என்று எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது. மேலும் அவர்கள் (ஜின்களைச் சேர்ந்த அந்த நபர்கள்) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் அதிசயமான குர்ஆனை செவியுற்றோம்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக நாம் நூஹை - அவருடைய மக்களின் பக்கம் (தூதராக) - அனுப்பினோம். ஏனெனில், நீர் உமது மக்களை - துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு வருவதற்கு முன்னர் - எச்சரிப்பீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi1. (நபியே!) கூறுவீராக: வஹ்யி மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதாவது: மெய்யாகவே ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியுற்று(த் தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களை நோக்கி) கூறினார்கள்: ‘‘நிச்சயமாக நாங்கள் மிக்க ஆச்சரியமான ஒரு குர்ஆனைச் செவியுற்றோம்.