caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 98

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:98

أَوَأَمِنَ أَهْلُ ٱلْقُرَىٰٓ أَن يَأْتِيَهُم بَأْسُنَا ضُحًى وَهُمْ يَلْعَبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லது ஊர்வாசிகள் அவர்கள் விளையாடும் போது நம் வேதனை அவர்களுக்கு முற்பகலில் வருவதை அச்சமற்றார்களா?
Tamil Translation - Omar Sharifஅல்லது, ஊர்வாசிகள், - அவர்களோ விளையாடுபவர்களாக இருக்கும்போது நம் தண்டனை அவர்களுக்கு முற்பகலில் வருவதை - அச்சமற்று விட்டார்களா?
Tamil Translation - Abdulhamid Baqawi98. அல்லது இவ்வூரார் (கவலையற்று) பகலில் விளையாடிக் கொண்டு இருக்கும் போதே நம் வேதனை அவர்களை வந்தடையாது என்று அவர்கள் அச்சமற்று இருக்கின்றனரா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70