قَالُوٓا۟ أَجِئْتَنَا لِنَعْبُدَ ٱللَّهَ وَحْدَهُۥ وَنَذَرَ مَا كَانَ يَعْبُدُ ءَابَآؤُنَا فَأْتِنَا بِمَا تَعِدُنَآ إِن كُنتَ مِنَ ٱلصَّٰدِقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை நாங்கள் விட்டு விட்டு அல்லாஹ்(வை) அவன் ஒருவனை மட்டும் நாங்கள் வணங்க வேண்டும் என்பதற்காக நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளர்களில் இருந்தால் நீர் நமக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வருவீராக” என்று கூறினர்.
Tamil Translation - Omar Sharif(அதற்கு) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் ஒருவனை மட்டும் நாங்கள் வணங்குவதற்காகவும் எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை நாங்கள் விட்டுவிடுவதற்காகவும் நீர் எங்களிடம் வந்தீரா? ஆக, நீர் உண்மையாளர்களில் இருந்தால் நீர் எங்களை எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வருவீராக.”
Tamil Translation - Abdulhamid Baqawi70. அதற்கவர்கள் ‘‘எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை நாங்கள் புறக்கணித்துவிட்டு அல்லாஹ் ஒருவனையே வணங்கும்படிச் செய்யவா நீங்கள் நம்மிடம் வந்தீர்கள்? (நாங்கள் அவ்வாறு செய்ய மாட்டோம்.) மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவராக இருந்தால் நீங்கள் நமக்கு அச்சமூட்டுவதை நம்மிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறினார்கள்.