caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 63

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:63

أَوَعَجِبْتُمْ أَن جَآءَكُمْ ذِكْرٌ مِّن رَّبِّكُمْ عَلَىٰ رَجُلٍ مِّنكُمْ لِيُنذِرَكُمْ وَلِتَتَّقُوا۟ وَلَعَلَّكُمْ تُرْحَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களிலுள்ள ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து அவர் உங்களை எச்சரிப்பதற்காகவும், நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காகவும், நீங்கள் கருணை காட்டப்படுவதற்காகவும் உங்களுக்கு நல்லுபதேசம் வந்ததைப் பற்றி வியக்கிறீர்களா?
Tamil Translation - Omar Sharif“உங்களிலுள்ள ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து - அவர் உங்களை எச்சரிப்பதற்காகவும்; இன்னும், நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காகவும்; இன்னும், நீங்கள் (அல்லாஹ்வினால்) கருணை காட்டப்படுவதற்காகவும் - உங்களுக்கு நல்லுபதேசம் வந்ததைப் பற்றி நீங்கள் வியப்படைகிறீர்களா?”
Tamil Translation - Abdulhamid Baqawi63. உங்களிலுள்ள ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசம் வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆவதற்காகவும் (அது வந்திருக்கிறது.) அதனால் நீங்கள் (இறைவனின்) அருளை அடையலாம்'' (என்றும் கூறினார்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70