وَنَادَىٰٓ أَصْحَٰبُ ٱلْأَعْرَافِ رِجَالًا يَعْرِفُونَهُم بِسِيمَىٰهُمْ قَالُوا۟ مَآ أَغْنَىٰ عَنكُمْ جَمْعُكُمْ وَمَا كُنتُمْ تَسْتَكْبِرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionசிகரவாசிகள் சில மனிதர்களை அழைப்பார்கள். (சிகரவாசிகள்) அவர்களை அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு அறிவார்கள். “உங்கள் சேமிப்பு(ம் உங்கள் கூட்டமு)ம், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததும் உங்களுக்குப் பலனளிக்கவில்லை!” என்று கூறுவார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், சிகரவாசிகள் சில மனிதர்களை அழைப்பார்கள். (சிகரவாசிகள்) அவர்களை அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு அறிவார்கள். “உங்கள் சேமிப்பு(களும் உங்கள் கூட்டங்களு)ம், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததும் உங்களுக்குப் பலனளிக்கவில்லை!” என்று கூறுவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi48. அந்த சிகரங்களில் உள்ளவர்கள், முக அடையாளத்தைக் கொண்டு (தண்டனைக் குள்ளானவர்கள் என) தாங்கள் அறிந்த சில மனிதர்களை கூவி அழைத்து, ‘‘நீங்கள் (உலகத்தில்) சம்பாதித்துச் சேகரித்து வைத்திருந்தவையும், நீங்கள் எவற்றைக் கொண்டு பெருமையடித்துக் கொண்டிருந்தீர்களோ அவையும் உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!'' என்று கூறுவார்கள்.