ٱتَّبِعُوا۟ مَآ أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوا۟ مِن دُونِهِۦٓ أَوْلِيَآءَ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(உலக மக்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதை பின்பற்றுங்கள். அதைத் தவிர (மற்ற) பொறுப்பாளர்களை பின்பற்றாதீர்கள். மிகக் குறைவாகவே நீங்கள் நல்லுணர்வு (நல்லுபதேசம்) பெறுகிறீர்கள்.
Tamil Translation - Omar Sharif(உலக மக்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட (இந்த வேதத்)தை பின்பற்றுங்கள். அதைத் தவிர (நீங்களாக ஏற்படுத்திக்கொண்ட, வழிகேட்டின் பக்கமும் சிலைகளை வணங்குவதின் பக்கமும் உங்களை அழைக்கின்ற உங்கள்) பொறுப்பாளர்க(ளின் வழிகாட்டுதல்க)ளை பின்பற்றாதீர்கள். மிகக் குறைவாகவே நீங்கள் நல்லுணர்வு (-நல்லுபதேசம்) பெறுகிறீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi3. (மனிதர்களே!) உங்களுக்காக உங்கள் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (மற்றெவரையும் உங்களுக்குப்) பொறுப்பாளர்(களாக ஆக்கி, அவர்)களை நீங்கள் பின்பற்றாதீர்கள். (எனினும், இதைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உங்களில் மிகக் குறைவுதான்.