إِنَّ ٱلَّذِينَ تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ عِبَادٌ أَمْثَالُكُمْ فَٱدْعُوهُمْ فَلْيَسْتَجِيبُوا۟ لَكُمْ إِن كُنتُمْ صَٰدِقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அல்லாஹ்வை அன்றி நீங்கள் பிரார்த்திப்பவர்கள் உங்களைப் போன்ற அடிமைகள் ஆவர். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களிடம் பிரார்த்தியுங்கள்; அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்கட்டும்!
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக அல்லாஹ்வை அன்றி நீங்கள் யாரிடம் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்றே (அல்லாஹ்வின்) அடிமைகள் ஆவார்கள். (நீங்கள் கேட்டதை அவர்கள் உங்களுக்கு கொடுப்பார்கள் என்ற உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களிடம் பிரார்த்தியுங்கள்; அவர்களும் உங்களுக்குப் பதிலளிக்கட்டும் (பார்க்கலாம்)!
Tamil Translation - Abdulhamid Baqawi194. நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர எவர்களை நீங்கள் (இறைவனென) அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே! (உங்கள் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று கூறுவதில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் அழையுங்கள்; உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்!