caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 175

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:175

وَٱتْلُ عَلَيْهِمْ نَبَأَ ٱلَّذِىٓ ءَاتَيْنَٰهُ ءَايَٰتِنَا فَٱنسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ ٱلشَّيْطَٰنُ فَكَانَ مِنَ ٱلْغَاوِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) நாம் நம் அத்தாட்சிகளை கொடுத்தவனுடைய செய்தியை அவர்கள் மீது ஓதிக் காட்டுவீராக. அவன் அதிலிருந்து கழண்டான். ஆகவே, ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்தான். அவன் வழிகெட்டவர்களில் ஆகிவிட்டான்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) நாம் நம் அத்தாட்சிகளை யாருக்கு கொடுத்தோமோ அவனுடைய செய்தியை அவர்களுக்கு முன் ஓதிக் காட்டுவீராக. அவன் அதிலிருந்து கழன்று கொண்டான். ஆகவே, ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்தான். ஆக, அவன் வழிகெட்டவர்களில் (-மூடர்களில்) ஆகிவிட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi175. (நபியே!) நீர் அவர்களுக்கு (‘பல்ஆம் இப்னு பாஊர்' என்னும்) ஒருவனுடைய சரித்திரத்தை ஓதிக் காண்பிப்பீராக. அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்(து கண்ணியமாக்கி வைத்)திருந்தோம். எனினும் அவன் ‘‘(பாம்பு தன் சட்டையை விட்டு வெளியேறுவதைப் போல) அதிலிருந்து முற்றிலும் வெளியேறிவிட்டான். ஆகவே, ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்; (அவனுடைய சூழ்ச்சிக்குள் சிக்கி) அவன் வழிதவறி விட்டான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70