caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 162

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:162

فَبَدَّلَ ٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنْهُمْ قَوْلًا غَيْرَ ٱلَّذِى قِيلَ لَهُمْ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِجْزًا مِّنَ ٱلسَّمَآءِ بِمَا كَانُوا۟ يَظْلِمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களில் அநீதியிழைத்தவர்கள் அவர்களுக்குக் கூறப்பட்டது அல்லாத ஒரு சொல்லாக மாற்றி(க் கூறி)னர். ஆகவே, அவர்கள் அநீதியிழைப்பவர்களாக இருந்ததால் அவர்கள் மீது வானத்திலிருந்து ஒரு வேதனையை இறக்கினோம்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்களில் நிராகரித்தவர்கள், அவர்களுக்கு எது கூறப்பட்டதோ அது அல்லாத ஒரு சொல்லாக மாற்றி(க் கூறி)னர். ஆகவே, அவர்கள் அநியாயம் (-பாவம்) செய்பவர்களாக இருந்ததால் அவர்கள் மீது வானத்திலிருந்து (கடுமையான) தண்டனையை இறக்கினோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi162. அவர்களில் வரம்பு மீறியவர்களோ, அவர்களுக்குக் கூறப்பட்ட (‘ஹித்ததுன்' என்ப)தை மாற்றி (‘ஹின்த்ததுன்' கோதுமை என்று) கூறினார்கள். ஆகவே, (இவ்வாறு) அவர்கள் அநியாயம் செய்ததன் காரணமாக நாம் அவர்கள் மீது வானத்திலிருந்து வேதனையை இறக்கிவைத்தோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70