caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-A'raaf அத்தியாயம், வசனம் 123

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 39 · 7:123

قَالَ فِرْعَوْنُ ءَامَنتُم بِهِۦ قَبْلَ أَنْ ءَاذَنَ لَكُمْ إِنَّ هَٰذَا لَمَكْرٌ مَّكَرْتُمُوهُ فِى ٱلْمَدِينَةِ لِتُخْرِجُوا۟ مِنْهَآ أَهْلَهَا فَسَوْفَ تَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version“உங்களுக்கு நான் அனுமதியளிப்பதற்கு முன்னர் நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டீர்கள்(?). நிச்சயமாக நகரத்தில், அதிலிருந்து அதில் வசிப்போரை வெளியேற்றுவதற்காக நீங்கள் சூழ்ச்சிசெய்த சூழ்ச்சிதான் இது. (இதன் தண்டனையை) அறிவீர்கள்” என்று ஃபிர்அவ்ன் கூறினான்.
Tamil Translation - Omar Sharifஃபிர்அவ்ன் கூறினான்: “உங்களுக்கு நான் அனுமதியளிப்பதற்கு முன்னர் நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டீர்கள். நிச்சயமாக இந்த நகரத்தில், அதிலிருந்து அதில் வசிப்போரை வெளியேற்றுவதற்காக நீங்கள் சூழ்ச்சிசெய்த சூழ்ச்சிதான் இது. (இதன் தண்டனையை) விரைவில் அறிவீர்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi123. அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) ‘‘உங்களுக்கு நான் அனுமதியளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக (மூஸாவுடன் கலந்து) நீங்கள் செய்த சதியாகும் இது. (இச்சதியின் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70