قَالَ أَلْقُوا۟ فَلَمَّآ أَلْقَوْا۟ سَحَرُوٓا۟ أَعْيُنَ ٱلنَّاسِ وَٱسْتَرْهَبُوهُمْ وَجَآءُو بِسِحْرٍ عَظِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“(நீங்கள்) எறியுங்கள்” என்று (மூஸா) கூறினார். அவர்கள் எறிந்தபோது மக்களுடைய கண்களை மயக்கினார்கள். அவர்களை திடுக்கிடச் செய்தனர். ஒரு பெரிய சூனியத்தைக் கொண்டு வந்தனர்.
Tamil Translation - Omar Sharif“(நீங்கள்) எறியுங்கள்” என்று (மூஸா) கூறினார். ஆக, அவர்கள் எறிந்தபோது மக்களுடைய கண்களை மயக்கினார்கள். இன்னும், அவர்களை திடுக்கிடச் செய்தனர். இன்னும், ஒரு பெரிய சூனியத்தை செய்து காட்டினர்.
Tamil Translation - Abdulhamid Baqawi116. அதற்கு மூஸா ‘‘நீங்களே (முதலில்) எறியுங்கள்'' என்று கூறினார். அவ்வாறு அவர்கள் எறிந்து மக்களுடைய கண்களைக் கட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மகத்தான சூனியத்தைச் செய்தனர்.