وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا۟ بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆக, ஆது மக்கள் கடுமையான குளிருடன் வீசக்கூடிய அதி வேகமான (கட்டுக்கடங்காத) ஒரு காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டார்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, ஆது சமுதாயம் கடுமையான குளிருடன் வீசக்கூடிய அதி வேகமான (கட்டுக்கடங்காத) ஒரு காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. ஆத் என்னும் மக்களோ, அதிவேகமாக விரைந்து (இரைந்து) செல்லும் (புயல்) காற்றைக்கொண்டு அழிக்கப்பட்டனர்.