caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Mulk அத்தியாயம், வசனம் 13

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 77 · 67:13

وَأَسِرُّوا۟ قَوْلَكُمْ أَوِ ٱجْهَرُوا۟ بِهِۦٓ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்கள் பேச்சை நீங்கள் இரகசியமாகப் பேசுங்கள் அல்லது அதை உரக்கப் பேசுங்கள்! நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளதை நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஉங்கள் பேச்சை நீங்கள் இரகசியமாகப் பேசுங்கள்! அல்லது, அதை உரக்கப் பேசுங்கள்! நிச்சயமாக அவன் (உங்கள்) நெஞ்சங்களில் உள்ளதை நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi13. (மனிதர்களே!) நீங்கள் உங்கள் வார்த்தைகளை இரகசியமாகக் கூறுங்கள் அல்லது பகிரங்கமாகவே கூறுங்கள். (எவ்விதம் கூறியபோதிலும், இறைவன் அதை நன்கறிவான். ஏனென்றால்,) நிச்சயமாக அவன், உள்ளங்களில் உள்ளவற்றையும் நன்கறிபவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70