caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Talaaq அத்தியாயம், வசனம் 4

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 99 · 65:4

وَٱلَّٰٓـِٔى يَئِسْنَ مِنَ ٱلْمَحِيضِ مِن نِّسَآئِكُمْ إِنِ ٱرْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَٰثَةُ أَشْهُرٍ وَٱلَّٰٓـِٔى لَمْ يَحِضْنَ وَأُو۟لَٰتُ ٱلْأَحْمَالِ أَجَلُهُنَّ أَن يَضَعْنَ حَمْلَهُنَّ وَمَن يَتَّقِ ٱللَّهَ يَجْعَل لَّهُۥ مِنْ أَمْرِهِۦ يُسْرًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்கள் பெண்களில் எவர்கள் மாதவிடாயிலிருந்து நிராசை அடைந்து விட்டனரோ (அவர்களின் இத்தா விஷயத்தில்) நீங்கள் சந்தேகித்தால் அவர்களின் இத்தா மூன்று மாதங்களாகும். இன்னும் (இது வரை) மாதவிடாய் வராத பெண்களுக்கும் (இத்தா மூன்று மாதங்களாகும்). கர்ப்பமுடைய பெண்கள் அவர்களின் (இத்தா) தவணை அவர்கள் தங்கள் கர்ப்பத்தை பெற்றெடுப்பதாகும். எவர் அல்லாஹ்வை அஞ்சுவாரோ அவருக்கு அவரின் காரியத்தில் இலகுவை அவன் ஏற்படுத்துவான்.
Tamil Translation - Omar Sharifஉங்கள் பெண்களில் எவர்கள் மாதவிடாயிலிருந்து நிராசை அடைந்து விட்டனரோ (அவர்களின் இத்தா விஷயத்தில்) நீங்கள் சந்தேகித்தால் அவர்களின் இத்தா மூன்று மாதங்களாகும். இன்னும் (இது வரை) மாதவிடாய் வராத பெண்களுக்கும் (இத்தா மூன்று மாதங்களாகும்). கர்ப்பமுடைய பெண்கள் அவர்களின் (இத்தா) தவணையாவது அவர்கள் தங்கள் கர்ப்பத்தை பெற்றெடுப்பதாகும். எவர் அல்லாஹ்வை அஞ்சுவாரோ அவருக்கு அவரின் காரியத்தில் இலகுவை அவன் ஏற்படுத்துவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. (தலாக் சொல்லப்பட்ட) உங்கள் மனைவிகளில் எவர்கள் (அதிக வயதாகி) மாதவிடாயின் நம்பிக்கை இழந்து, (இத்தாவைக் கணக்கிட) என்ன செய்வதென்று நீங்கள் சந்தேகத்திற்கு உள்ளாகிவிட்டால், அத்தகைய பெண்களுக்கும், இன்னும் எவர்களுக்கு இதுவரை மாதவிடாய் ஏற்படவில்லையோ அவர்களுக்கும், இத்தாவின் தவணை மூன்று மாதங்களாகும். கர்ப்பமான பெண்களுக்கு இத்தாவின் தவணை அவர்கள் பிரசவிக்கும் வரை இருக்கிறது. எவர்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்படுகிறார்களோ, அவர்களுடைய காரியத்தை அவர்களுக்கு எளிதாக்கி விடுகிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70