caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

At-Taghaabun அத்தியாயம், வசனம் 7

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 108 · 64:7

زَعَمَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَن لَّن يُبْعَثُوا۟ قُلْ بَلَىٰ وَرَبِّى لَتُبْعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلْتُمْ وَذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் (மீண்டும் உயிர்கொடுத்து) அறவே எழுப்பப்பட மாட்டார்கள் என்று நிராகரித்தவர்கள் பிதற்றுகின்றனர். (நபியே!) நீர் கூறுவீராக! ஏன் இல்லை! என் இறைவன் மீது சத்தியமாக நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள். பிறகு நீங்கள் செய்தவற்றை நிச்சயமாக உங்களுக்கு அறிவிக்கப்படும். அது அல்லாஹ்விற்கு மிக எளிதானதே!
Tamil Translation - Omar Sharif“அவர்கள் (மீண்டும் உயிர்கொடுத்து) அறவே எழுப்பப்பட மாட்டார்கள்” என்று நிராகரித்தவர்கள் பிதற்றுகிறார்கள். (நபியே!) நீர் கூறுவீராக! “ஏன் இல்லை! என் இறைவன் மீது சத்தியமாக நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள். பிறகு, நீங்கள் செய்தவற்றை நிச்சயமாக நீங்கள் அறிவித்துக் கொடுக்கப்படுவீர்கள். அது அல்லாஹ்விற்கு மிக எளிதானதே!”
Tamil Translation - Abdulhamid Baqawi7. (மரணித்த பின்னர் உயிர் கொடுத்து) எழுப்பப்பட மாட்டோம் என்று நிச்சயமாக நிராகரிப்பவர்கள் எண்ணிக்கொண்டு இருக்கின்றனர். (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘அவ்வாறல்ல. என் இறைவன் மீது சத்தியமாக! மெய்யாகவே நீங்கள் எழுப்பப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருப்பவற்றைப் பற்றி பின்னர் நீங்கள் அறிவுறுத்தவும் படுவீர்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதே.”
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70