ذَٰلِكَ بِأَنَّهُۥ كَانَت تَّأْتِيهِمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ فَقَالُوٓا۟ أَبَشَرٌ يَهْدُونَنَا فَكَفَرُوا۟ وَتَوَلَّوا۟ وَّٱسْتَغْنَى ٱللَّهُ وَٱللَّهُ غَنِىٌّ حَمِيدٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅதற்கு காரணம், நிச்சயமாக அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டிருந்தனர். “மனிதர்களா எங்களுக்கு நேர்வழி காட்டுவார்கள்?” என்று அவர்கள் (ஏளனமாக) கூறினார்கள். ஆகவே, அவர்கள் நிராகரித்தனர், (நேர்வழியை விட்டும்) விலகினார்கள். அல்லாஹ்வும் (அவர்களை விட்டும்) தேவையற்றவனாக இருக்கின்றான். அல்லாஹ் மகா செல்வந்தன், மகா புகழுக்குரியவன்.
Tamil Translation - Omar Sharifஅதற்கு காரணம், நிச்சயமாக அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டிருந்தனர். ஆக, “மனிதர்களா எங்களுக்கு நேர்வழி காட்டுவார்கள்?” என்று அவர்கள் (ஏளனமாக) கூறினார்கள். ஆகவே, அவர்கள் நிராகரித்தனர். இன்னும் (நேர்வழியை விட்டும்) விலகினார்கள். அல்லாஹ்வும் அவர்களை விட்டு தேவையற்றவனாக இருக்கிறான். அல்லாஹ் முற்றிலும் நிறைவானவன் (படைப்புகளிடம் எவ்வித தேவையும் அற்றவன்), மகா புகழுக்குரியவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. இதன் காரணமாவது: நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களுக்காக அனுப்பப்பட்ட (நம்) தூதர்கள் அவர்களிடம் வந்து கொண்டே இருந்தார்கள். எனினும் அவர்களோ ‘‘(நம்மைப் போன்ற) ஒரு மனிதரா நமக்கு நேரான வழியைக் காட்டிவிடுவார்?'' என்று கூறி அவர்களை நிராகரித்துப் புறக்கணித்து விட்டனர். அல்லாஹ்வும் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. அல்லாஹ் (இவர்களின்) தேவையற்றவனும், புகழுடையவனும் ஆவான்.