فَٱتَّقُوا۟ ٱللَّهَ مَا ٱسْتَطَعْتُمْ وَٱسْمَعُوا۟ وَأَطِيعُوا۟ وَأَنفِقُوا۟ خَيْرًا لِّأَنفُسِكُمْ وَمَن يُوقَ شُحَّ نَفْسِهِۦ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களுக்கு முடிந்தளவு அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (அவனுக்கும் தூதருக்கும்) செவி தாழ்த்துங்கள்! கீழ்ப்படியுங்கள்! உங்கள் நன்மைக்காக செல்வத்தை தர்மம் செய்யுங்கள்! எவர்கள் தமது மனதின் கஞ்சத்தனத்தில் இருந்து பாதுகாக்கப்படுவார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவார்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, உங்களுக்கு முடிந்தளவு அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (அவனுக்கும் தூதருக்கும்) செவி தாழ்த்துங்கள்! கீழ்ப்படியுங்கள்! உங்கள் ஆன்மாக்களின் நன்மைக்காக செல்வத்தை தர்மம் செய்யுங்கள்! எவர்கள் தமது ஆன்மாக்களின் கஞ்சத்தனத்தில் இருந்து பாதுகாக்கப்படுவார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi16. ஆதலால், உங்களால் சாத்தியமான வரை அல்லாஹ்வுக்குப் பயந்து, அவனு(டைய வசனங்களு)க்குச் செவிசாய்த்து கீழ்ப்படிந்து நடந்து, தர்மமும் செய்யுங்கள். இது உங்களுக்குத்தான் மிக நன்று. எவர்கள் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அவர்கள்தான் நிச்சயமாக வெற்றியடைந்து விடுவார்கள்.