يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ إِنَّ مِنْ أَزْوَٰجِكُمْ وَأَوْلَٰدِكُمْ عَدُوًّا لَّكُمْ فَٱحْذَرُوهُمْ وَإِن تَعْفُوا۟ وَتَصْفَحُوا۟ وَتَغْفِرُوا۟ فَإِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! நிச்சயமாக, உங்கள் மனைவிகளிலும் உங்கள் பிள்ளைகளிலும் உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றனர். ஆகவே, அவர்களிடம் நீங்கள் கவனமாக இருங்கள். நீங்கள் பிழை பொறுத்தால், (அவர்களின் தவறுகளை) புறக்கணித்தால், (அவர்களை) மன்னித்தால் (அது மிகச் சிறந்தது. ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! நிச்சயமாக, உங்கள் மனைவிகளிலும் உங்கள் பிள்ளைகளிலும் உங்களுக்கு எதிரிகள் இருக்கிறார்கள். ஆகவே, அவர்களிடம் நீங்கள் கவனமாக (உஷாராக, எச்சரிக்கையாக) இருங்கள். இன்னும், நீங்கள் பிழை பொறுத்தால், (அவர்களின் தவறுகளை) புறக்கணித்தால், (அவர்களை) மன்னித்தால் (அது மிகச் சிறந்தது. ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi14. நம்பிக்கையாளர்களே! உங்கள் மனைவிகளிலும், உங்கள் சந்ததிகளிலும் நிச்சயமாக உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். அவர்(களின் குற்றங்)களை நீங்கள் சகித்துப் புறக்கணித்து மன்னித்து வந்தால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மகா கருணையுடையவனும் ஆவான். (ஆகவே, உங்கள் குற்றங்களையும் அவ்வாறே மன்னித்துவிடுவான்.)