caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Jumu'a அத்தியாயம், வசனம் 5

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 110 · 62:5

مَثَلُ ٱلَّذِينَ حُمِّلُوا۟ ٱلتَّوْرَىٰةَ ثُمَّ لَمْ يَحْمِلُوهَا كَمَثَلِ ٱلْحِمَارِ يَحْمِلُ أَسْفَارًۢا بِئْسَ مَثَلُ ٱلْقَوْمِ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّٰلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதவ்ராத்தின் படி அமல் செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்டு பிறகு, அதன்படி அமல் செய்யாதவர்களின் உதாரணம் கழுதையின் உதாரணத்தைப் போலாகும். அது பல நூல்களை (தன் முதுகின் மீது) சுமக்கிறது. (ஆனால் அவற்றின் மூலம் அதற்கு எந்த நன்மையும் இல்லை. அவ்வாறே தவ்ராத் இவர்களுக்கு கொடுக்கப்பட்டும் அதன்படி இவர்கள் அமல் செய்யாததால் இவர்களும் எந்த நன்மையும் அடைய மாட்டார்கள்.) அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பித்த மக்களின் உதாரணம் மிகக் கெட்டது. அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
Tamil Translation - Omar Sharifதவ்ராத்தின் படி அமல் செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்டு பிறகு, அதன்படி அமல் செய்யாதவர்களின் உதாரணம் கழுதையின் உதாரணத்தைப் போலாகும். அது பல நூல்களை (தன் முதுகின் மீது) சுமக்கிறது. (ஆனால் அவற்றின் மூலம் அதற்கு எந்த நன்மையும் இல்லை. அவ்வாறே தவ்ராத் இவர்களுக்கு கொடுக்கப்பட்டும் அதன்படி இவர்கள் அமல் செய்யாததால் இவர்களும் எந்த நன்மையும் அடைய மாட்டார்கள்.) அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பித்த மக்களின் உதாரணம் மிகக் கெட்டது. இன்னும், அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi5. ‘தவ்றாத்' என்னும் வேதத்தைச் சுமந்து கொண்டு, அதிலுள்ளபடி நடக்காதவர்களின் உதாரணம்: புத்தகங்களைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கும் மக்களின் இவ்வுதாரணம் மகா கெட்டது. அல்லாஹ் இத்தகைய அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்தமாட்டான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70