لَقَدْ كَانَ لَكُمْ فِيهِمْ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُوا۟ ٱللَّهَ وَٱلْيَوْمَ ٱلْـَٔاخِرَ وَمَن يَتَوَلَّ فَإِنَّ ٱللَّهَ هُوَ ٱلْغَنِىُّ ٱلْحَمِيدُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களுக்கு - (அதாவது) அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைப்பவராக இருப்பவருக்கு- அவர்களிடம் (இப்ராஹீம் இன்னும் அவரை பின்பற்றியவர்களிடம்) திட்டவட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது. யார் (நபிமார்களை பின்பற்றுவதை விட்டும்) விலகுவாரோ (அத்தகையவர்களை விட்டும்) நிச்சயமாக அல்லாஹ் அவன் முற்றிலும் தேவையற்றவன், மகா புகழுக்குரியவன்.
Tamil Translation - Omar Sharifஉங்களுக்கு - (அதாவது,) அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆசைவைப்பவராக (அஞ்சுகிறவர்களாக) இருப்பவர்களுக்கு - அவர்களிடம் (-இப்ராஹீம் இன்னும் அவரை பின்பற்றியவர்களிடம்) திட்டவட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது. இன்னும், யார் (நபிமார்களை பின்பற்றுவதை விட்டும்) விலகுவாரோ (அத்தகையவர்களை விட்டும்) நிச்சயமாக அல்லாஹ் முற்றிலும் தேவையற்றவன், நிறைவானவன், மகா புகழுக்குரியவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi6. நிச்சயமாக அல்லாஹ்வையும், மறுமை நாளையும் மெய்யாகவே நம்புகிற உங்களுக்கு இவர்களில் அழகான முன்னுதாரணம் இருக்கிறது. எவர் புறக்கணிக்கிறாரோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களின்) தேவையற்றவன், மிக புகழுடையவன் ஆவான்.