رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا۟ وَٱغْفِرْ لَنَا رَبَّنَآ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
Tamil Translation - Omar Sharif - Abridged Version“எங்கள் இறைவா! நிராகரித்தவர்களுக்கு எங்களை ஒரு சோதனையாக ஆக்கிவிடாதே! (அவர்கள் மூலம் எங்களை வேதனை செய்துவிடாதே! அவர்களை எங்கள் மீது சாட்டிவிடாதே! அவர்கள் எங்களை எங்கள் மார்க்கத்தை விட்டு எங்களை திருப்பிவிடுவார்கள்!) எங்கள் இறைவா! எங்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவாய்.” (என்றும் அவர்கள் பிரார்த்தித்தார்கள்.)
Tamil Translation - Omar Sharif“எங்கள் இறைவா! நிராகரித்தவர்களுக்கு எங்களை ஒரு சோதனையாக ஆக்கிவிடாதே! (அவர்கள் மூலம் எங்களை தண்டித்துவிடாதே! அவர்களை எங்கள் மீது சாட்டிவிடாதே! அவர்கள் எங்கள் மார்க்கத்தை விட்டு எங்களை திருப்பிவிடுவார்கள்!) இன்னும், எங்கள் இறைவா! எங்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவாய்.” (என்றும் அவர்கள் பிரார்த்தித்தார்கள்.)
Tamil Translation - Abdulhamid Baqawi5. ‘‘எங்கள் இறைவனே! எங்களை நீ நிராகரிப்பவர்களின் துன்பத்திற்குள்ளாக்கி விடாதே! எங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீதான் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவாய்'' (என்றும்) பிரார்த்தித்தார்.