وَوَهَبْنَا لَهُۥٓ إِسْحَٰقَ وَيَعْقُوبَ كُلًّا هَدَيْنَا وَنُوحًا هَدَيْنَا مِن قَبْلُ وَمِن ذُرِّيَّتِهِۦ دَاوُۥدَ وَسُلَيْمَٰنَ وَأَيُّوبَ وَيُوسُفَ وَمُوسَىٰ وَهَٰرُونَ وَكَذَٰلِكَ نَجْزِى ٱلْمُحْسِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநாம் அவருக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் வழங்கினோம். எல்லோரையும் நேர்வழி செலுத்தினோம். இதற்கு முன்னர் நூஹையும், அவருடைய சந்ததிகளில் தாவூதையும், ஸுலைமானையும், ஐயூபையும், யூஸுஃபையும், மூஸாவையும், ஹாரூனையும் நாம் நேர்வழி செலுத்தினோம். நல்லறம் புரிவோருக்கு இவ்வாறே (நற்)கூலி கொடுக்கிறோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் வழங்கினோம். எல்லோரையும் நேர்வழி நடத்தினோம். இதற்கு முன்னர் நூஹையும், அவருடைய சந்ததிகளில் தாவூதையும், ஸுலைமானையும், ஐயூபையும், யூஸுஃபையும், மூஸாவையும், ஹாரூனையும் நாம் நேர்வழி நடத்தினோம். நல்லறம் புரிவோருக்கு இவ்வாறே (நற்)கூலி கொடுக்கிறோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi84. நாம் (இப்ராஹீமாகிய) அவருக்கு இஸ்ஹாக்கையும் (அவருடைய மகன்) யஅகூபையும் (சந்ததிகளாகத்) தந்தருள் புரிந்தோம். இவர்கள் அனைவரையும் நாம் நேரான வழியில் செலுத்தினோம். இதற்கு முன்னர் நூஹையும், அவருடைய சந்ததிகளாகிய தாவூத், ஸுலைமான், ஐயூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நாம் நேரான வழியில் செலுத்தினோம். நன்மை செய்பவர்களுக்கு இவ்வாறே நாம் (நற்)கூலி அளிக்கிறோம்.