وَكَيْفَ أَخَافُ مَآ أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُم بِٱللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِۦ عَلَيْكُمْ سُلْطَٰنًا فَأَىُّ ٱلْفَرِيقَيْنِ أَحَقُّ بِٱلْأَمْنِ إِن كُنتُمْ تَعْلَمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் இணைவைத்தவற்றை எவ்வாறு பயப்படுவேன். உங்கள் மீது அவன் எதற்கு ஆதாரத்தை இறக்கவில்லையோ அதை நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கியதை நீங்கள் பயப்படுவதில்லை. ஆகவே, இரு பிரிவினரில் பாதுகாப்புப்பெற மிகத் தகுதியுடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (பதில் கூறுங்கள்).
Tamil Translation - Omar Sharif“இன்னும், நீங்கள் இணைவைத்தவற்றை எவ்வாறு நான் பயப்படுவேன். உங்களுக்கு அவன் எதற்கு ஆதாரத்தை இறக்கவில்லையோ அதை நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விற்கு இணையாக்கியதைப் பற்றி நீங்கள் பயப்படுவதில்லை. ஆகவே, இரு பிரிவினரில் (இறைவனின் கோபத்திலிருந்து) பாதுகாப்புப்பெற மிகத் தகுதியுடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (பதில் கூறுங்கள்).”
Tamil Translation - Abdulhamid Baqawi81. உங்களுக்கு அல்லாஹ் எதற்கு அத்தாட்சியை இறக்கவில்லையோ அதை நீங்கள் அல்லாஹ்வுக்கு இணையாக்கியதைப் பற்றி ஒரு சிறிதும் நீங்கள் பயப்படாதிருக்க, நீங்கள் இணைவைத்தவற்றை நான் எவ்வாறு பயப்படுவேன். அச்சமற்றிருக்க நம்மிரு பிரிவினரில் மிகத் தகுதியுடையவர்கள் யார்? என்பதை நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (கூறுங்கள்).