وَكَذَٰلِكَ نُرِىٓ إِبْرَٰهِيمَ مَلَكُوتَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَلِيَكُونَ مِنَ ٱلْمُوقِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவ்வாறுதான், அவர் (அறிந்துகொள்வதற்காகவும்) உறுதியான நம்பிக்கை உடையவர்களில் ஆவதற்காகவும் வானங்கள், மற்றும் பூமியின் பேராட்சியை இப்ராஹீமுக்கு காண்பித்தோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (நேர்வழியையும் வழிகேட்டையும் அவருக்கு நாம் காண்பித்து கொடுத்த) இவ்வாறுதான், வானங்கள்; மற்றும், பூமியின் பேராட்சியை இப்ராஹீமுக்கு காண்பித்தோம். ஏனெனில், (அவர் அல்லாஹ்வின் வல்லமையை அறிந்து கொள்வதற்காக.) இன்னும், அவர் உறுதியான நம்பிக்கை உடையவர்களில் ஆகுவதற்காக.
Tamil Translation - Abdulhamid Baqawi75. இப்றாஹீம் உறுதியான நம்பிக்கையுடையவர்களில் ஆவதற்காக வானங்களிலும், பூமியிலுமுள்ள (நம்) ஆட்சிகளை நாம் அவருக்கு இவ்வாறு காண்பித்து வந்தோம்.