caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 73

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:73

وَهُوَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ وَيَوْمَ يَقُولُ كُن فَيَكُونُ قَوْلُهُ ٱلْحَقُّ وَلَهُ ٱلْمُلْكُ يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ عَٰلِمُ ٱلْغَيْبِ وَٱلشَّهَٰدَةِ وَهُوَ ٱلْحَكِيمُ ٱلْخَبِيرُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் உண்மையில் வானங்களையும், பூமியையும் படைத்தான். ‘ஆகுக!’ என அவன் கூறும் நாளில் உடனே (அது) ஆகிவிடும். அவனுடைய சொல்தான் உண்மை. சூரில் ஊதப்படும் நாளில், அவனுக்கே ஆட்சி இருக்கும். மறைவானதையும், வெளிப்படையானதையும் அவன் அறிந்தவன். அவன்தான் ஞானவான், ஆழ்ந்தறிபவன்.
Tamil Translation - Omar Sharifஅவன்தான் உண்மையில் வானங்களையும், பூமியையும் படைத்தான். இன்னும், (மறுமை நிகழும்போது வானமும் பூமியும் வேறு வானமாகவும் பூமியாகவும் மாற்றப்படும். அப்போது) ‘ஆகுக!’ என அவன் கூறும் அந்த நாளில் உடனே (அது அவன் நாடியபடி அவை இரண்டும்) ஆகிவிடும்.
Tamil Translation - Abdulhamid Baqawi73. வானங்களையும், பூமியையும் படைத்தவன் உண்மையாகவே அவன்தான். (அவன் எதையும் படைக்கக் கருதும்போது) ‘ஆகுக!' என அவன் கூறுவதுதான் (தாமதம்.) உடனே (அது) ஆகிவிடும்.அவனுடைய சொல்தான் உண்மை சூர் (எக்காளம்) ஊதப்படும் நாளில் அதிகாரம் அவன் ஒருவனுடையதாகவே இருக்கும். மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானமுடையவனாகவும் (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70