قُلْ أَرَءَيْتُمْ إِنْ أَخَذَ ٱللَّهُ سَمْعَكُمْ وَأَبْصَٰرَكُمْ وَخَتَمَ عَلَىٰ قُلُوبِكُم مَّنْ إِلَٰهٌ غَيْرُ ٱللَّهِ يَأْتِيكُم بِهِ ٱنظُرْ كَيْفَ نُصَرِّفُ ٱلْـَٔايَٰتِ ثُمَّ هُمْ يَصْدِفُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version"அல்லாஹ், உங்கள் கேள்விப்புலனையும் உங்கள் பார்வைகளையும் எடுத்தால்; உங்கள் உள்ளங்கள் மீது முத்திரையிட்டால், அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் கடவுள்(களில்) யார் அவற்றை உங்களுக்குக் கொண்டுவருவார் என்பதை அறிவியுங்கள்?” என்று (நபியே!) கூறுவீராக. அத்தாட்சிகளை எவ்வாறு விவரிக்கிறோம் என்பதை கவனிப்பீராக. பிறகும், அவர்கள் புறக்கணிக்கின்றனர்.
Tamil Translation - Omar Sharif“அல்லாஹ், உங்கள் செவித் திறனையும் உங்கள் பார்வைகளையும் எடுத்தால்; இன்னும், உங்கள் உள்ளங்கள் மீது முத்திரையிட்டால், அல்லாஹ் அல்லாத வேறு இறைவன் யார் இருக்கிறார், அவர் அவற்றை உங்களுக்கு (திரும்ப)க் கொண்டு வருவாரா என்பதை அறிவியுங்கள்?’’ என்று (நபியே!) கூறுவீராக. (இன்னும், நபியே!) நாம் அத்தாட்சிகளை எவ்வாறு விவரிக்கிறோம் என்பதை கவனிப்பீராக. (இவ்வளவு தெளிவாக விவரித்த) பிறகும், அவர்கள் புறக்கணிக்கிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi46. ‘‘அல்லாஹ், உங்கள் கேள்விப்புலனையும் பார்வைகளையும் எடுத்து விட்டு உங்கள் உள்ளங்களின் மீது முத்திரை வைத்துவிட்டால், அல்லாஹ்வை அன்றி எந்த இறைவன் அவற்றை உங்களுக்குக் கொடுப்பான் என்பதை நீங்கள் சிந்தித்தீர்களா?'' என்று (நபியே!) (அவர்களைக்) கேட்பீராக. (நம் ஆற்றலுக்குரிய) அத்தாட்சிகளை எவ்வாறு (விதவிதமாக) விவரிக்கிறோம் என்பதை நீர் கவனிப்பீராக. (இவ்வாறிருந்தும்) பின்னும் அவர்கள் புறக்கணித்தே வருகின்றனர்.