caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 44

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:44

فَلَمَّا نَسُوا۟ مَا ذُكِّرُوا۟ بِهِۦ فَتَحْنَا عَلَيْهِمْ أَبْوَٰبَ كُلِّ شَىْءٍ حَتَّىٰٓ إِذَا فَرِحُوا۟ بِمَآ أُوتُوٓا۟ أَخَذْنَٰهُم بَغْتَةً فَإِذَا هُم مُّبْلِسُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதாங்கள் உபதேசிக்கப்பட்டதை அவர்கள் மறந்தபோது (செல்வங்கள்) எல்லாவற்றின் வாசல்களை அவர்களுக்குத் திறந்தோம். முடிவாக, தாங்கள் கொடுக்கப்பட்டதைக் கொண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தபோது அவர்களைத் திடீரென பிடித்தோம். அப்போது, அவர்கள் நம்பிக்கையிழந்து விடுகிறார்கள்.
Tamil Translation - Omar Sharifஆக, அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டதை அவர்கள் மறந்தபோது (செல்வங்கள்) எல்லாவற்றின் வாசல்களை அவர்களுக்குத் திறந்(து கொடுத்)தோம். முடிவாக, அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட (செல்வத்)தினால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தபோது அவர்களைத் திடீரென பிடித்தோம். அப்போது, அவர்கள் துக்கப்பட்டு துயரப்பட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi44. அவர்களுக்குச் செய்யப்பட்ட நல்லுபதேசத்தை அவர்கள் மறந்து விடவே (அவர்களைச் சோதிப்பதற்காக) ஒவ்வொரு பொரு(ள் செல்வங்க)ளின் வாயிலையும் நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம். (அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் தாராளமாக கிடைத்துக் கொண்டிருந்தன.) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றைக் கொண்டு அவர்கள் பெருமையுடன் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருந்த சமயத்தில் (நமது வேதனையைக் கொண்டு) நாம் அவர்களைத் திடீரென பிடித்துக் கொண்டோம் (தண்டித்தோம்). அந்நேரத்தில் அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70