وَلَوْ تَرَىٰٓ إِذْ وُقِفُوا۟ عَلَىٰ رَبِّهِمْ قَالَ أَلَيْسَ هَٰذَا بِٱلْحَقِّ قَالُوا۟ بَلَىٰ وَرَبِّنَا قَالَ فَذُوقُوا۟ ٱلْعَذَابَ بِمَا كُنتُمْ تَكْفُرُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(அவர்கள்) தங்கள் இறைவனுக்கு முன் நிறுத்தப்படும்போது நீர் (அவர்களைப்)பார்த்தால்... (அப்போது இறைவன் "விசாரணை நாளாகிய) இது உண்மை இல்லையா?” என்று கூறுவான். அவர்கள், "எங்கள் இறைவன் சத்தியமாக! ஏனில்லை. (உண்மைதான்)” எனக் கூறுவர். "ஆகவே, நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனால் வேதனையை சுவையுங்கள்” என்று (இறைவன்) கூறுவான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (அவர்கள்) தங்கள் இறைவனுக்கு முன் நிறுத்தப்படும்போது நீர் (அவர்களைப்) பார்த்தால், (அப்போது இறைவன், விசாரணை நாளாகிய) இது உண்மை இல்லையா? என்று கூறுவான். அவர்கள், “எங்கள் இறைவன் மீது சத்தியமாக! ஏனில்லை (உண்மைதான்)’’ எனக் கூறுவர். “ஆகவே, நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இந்த தண்டனையை சுவையுங்கள்’’ என்று (இறைவன்) கூறுவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi30. (இவ்வாறு கூறும்) அவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) தங்கள் இறைவனுக்கு முன் நிறுத்தப்படும்பொழுது (நபியே! நீர் அவர்களைக்) காண்பீராயின்! (அது சமயம் இறைவன் அவர்களை நோக்கி, ‘‘விசாரணை நாளாகிய) இது உண்மையல்லவா?'' என்று கேட்பான். (அதற்கு) அவர்கள், ‘‘எங்கள் இறைவனே! உண்மைதான்'' எனக் கூறுவார்கள். (அதற்கு) அவன் ‘‘(இதை) நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக (நரகத்தின்) வேதனையை நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள்'' என்று கூறுவான்.