بَلْ بَدَا لَهُم مَّا كَانُوا۟ يُخْفُونَ مِن قَبْلُ وَلَوْ رُدُّوا۟ لَعَادُوا۟ لِمَا نُهُوا۟ عَنْهُ وَإِنَّهُمْ لَكَٰذِبُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நிலைமை அவர்கள் எண்ணியது போன்று) அல்ல! முன்னர் (அவர்கள்) மறைத்திருந்தவை அவர்களுக்கு வெளிப்படும். அவர்கள் (உலகிற்கு) திருப்பப்பட்டால், அவர்கள் எதைவிட்டு தடுக்கப்பட்டார்களோ அதற்கே மீளுவார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான்.
Tamil Translation - Omar Sharif(நிலைமை அவர்கள் எண்ணியது போன்று அல்ல!) மாறாக, முன்னர் (அவர்கள்) மறைத்திருந்தவை அவர்களுக்கு (முன்னர்) வெளிப்படும். அவர்கள் (உலகத்திற்கு) திருப்பி அனுப்பப்பட்டால், அவர்கள் எதை விட்டு தடுக்கப்பட்டார்களோ அதற்கே திரும்புவார்கள். இன்னும், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi28. (இதுவும் அவர்கள் மனமாறக் கூறவில்லை) மாறாக! இதற்கு முன்னர் (அவர்கள் தங்களுக்குள்) மறைத்து வைத்திருந்ததுதான் அவர்களிடம் தென்பட்டது. (ஏனென்றால்,) அவர்கள் (இவ்வுலகத்திற்குத்) திரும்ப அனுப்பப்பட்டால், அவர்களுக்குத் தடை செய்திருந்தவற்றின் பக்கமே மீண்டும் செல்வார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான்.