وَلَوْ تَرَىٰٓ إِذْ وُقِفُوا۟ عَلَى ٱلنَّارِ فَقَالُوا۟ يَٰلَيْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِـَٔايَٰتِ رَبِّنَا وَنَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநரகத்தின் முன் அவர்கள் நிறுத்தப்படும் போது, (நபியே! நீர் அவர்களைப்) பார்த்தால்... “நாங்கள் திருப்(பி அனுப்)பப்பட வேண்டுமே! எங்கள் இறைவனின் வசனங்களை பொய்ப்பிக்க மாட்டோமே; நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோமே” என்று (அவர்கள்) கூறுவார்கள்.
Tamil Translation - Omar Sharifநரகத்தின் முன் அவர்கள் நிறுத்தப்படும் போது, (நபியே! நீர் அவர்களைப்) பார்த்தால், (அப்போது) அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் (உலகத்திற்கு) திருப்பி அனுப்பப்பட வேண்டுமே! இன்னும், எங்கள் இறைவனின் வசனங்களை நாங்கள் பொய்ப்பிக்க மாட்டோமே; இன்னும், நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோமே!”
Tamil Translation - Abdulhamid Baqawi27. (நரக) நெருப்பின் முன் அவர்கள் நிறுத்தப்படும் பொழுது, (நபியே!) நீர் (அவர்களைப்) பார்த்தால், ‘‘நாங்கள் (உலகத்திற்கு)த் திரும்ப அனுப்பப்பட வேண்டுமே! (அவ்வாறாயின்) எங்கள் இறைவனின் வசனங்களை நாங்கள் பொய்யாக்காமல், நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோம்'' என்று அவர்கள் புலம்புவார்கள்.