caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 17

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:17

وَإِن يَمْسَسْكَ ٱللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُۥٓ إِلَّا هُوَ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) அல்லாஹ் உம்மை ஒரு சிரமத்தைக் கொண்டு தொட்டால், அவனைத் தவிர அதை நீக்குபவர் அறவே இல்லை. உம்மை ஒரு நன்மையைக்கொண்டு தொட்டால் (அதைத் தடுப்பவருமில்லை), அவன் எல்லாவற்றின் மீது பேராற்றலுடையவன்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) அல்லாஹ் உமக்கு ஒரு சிரமத்தைக் கொடுத்தால் அவனைத் தவிர அதை நீக்குபவர் அறவே இல்லை. இன்னும், அவன் உமக்கு ஒரு நன்மையைக் கொடுத்தால் (அதைத் தடுப்பவருமில்லை), அவன் எல்லாவற்றின் மீது பேராற்றலுடையவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi17. (நபியே!) அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கிழைத்தால், அதை நீக்குபவர் அவனைத் தவிர வேறெவருமில்லை. உமக்கு ஒரு நன்மையை அவன் கொடுத்தாலும் (அதைத் தடுத்துவிடக் கூடியவன் எவனும் இல்லை.) அவன் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70