قُلْ أَغَيْرَ ٱللَّهِ أَبْغِى رَبًّا وَهُوَ رَبُّ كُلِّ شَىْءٍ وَلَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ إِلَّا عَلَيْهَا وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் அல்லாதவனையா -அவன் எல்லாவற்றின் இறைவனாக இருக்க- நான் இறைவனாக (எனக்கு)த் தேடுவேன்? (பாவம் செய்கிற) ஒவ்வோர் ஆன்மா(வும்) தனக்கெதிராகவே தவிர (பாவம்) செய்வதில்லை. பாவம் செய்யக்கூடிய ஓர் ஆன்மா மற்றொன்றின் பாவத்தை சுமக்காது. (இறந்த) பிறகு, உங்கள் இறைவன் பக்கம்தான் உங்கள் மீட்சி இருக்கிறது. நீங்கள் முரண்பட்டு கொண்டிருந்தவற்றில் (எது தவறு, எது சரி என்று அவன்) உங்களுக்கு அறிவிப்பான்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் அல்லாதவனையா - அவனோ எல்லாவற்றின் இறைவனாக இருக்க - நான் இறைவனாக (எனக்கு)த் தேடுவேன்? (பாவம் செய்கிற) ஒவ்வோர் ஆன்மா(வும்) தனக்கெதிராகவே தவிர (பாவம்) செய்வதில்லை. பாவம் செய்யக்கூடிய ஓர் ஆன்மா மற்றொன்றின் பாவத்தை சுமக்காது. (நீங்கள் இறந்த) பிறகு, உங்கள் இறைவன் பக்கம்தான் உங்கள் மீளுமிடம் இருக்கிறது. ஆக, நீங்கள் கருத்துவேறுபாடு கொண்டிருந்தவற்றில் (உண்மையை) உங்களுக்கு அறிவிப்பான். (சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கு செல்லும்போதும் நரகவாசிகள் நரகத்தில் தள்ளப்படும்போதும் உண்மையான வழிபாடு எது பொய்யான வழிபாடு எது என்பதை நீங்கள் அறிவீர்கள்.)
Tamil Translation - Abdulhamid Baqawi164. ‘‘அல்லாஹ்வே அனைவரையும் படைத்து பரிபாலிக்க அவனையன்றி மற்றெவரையும் எனக்கு இறைவனாக நான்எடுத்துக் கொள்வேனா? பாவம் செய்யும் ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கே கேட்டைத் தேடிக் கொள்கிறது. ஆகவே, ஓர் ஆத்மாவின் (பாவச்) சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. (இறந்த) பின்னர் நீங்கள் அனைவரும் உங்கள் இறைவனிடமே செல்வீர்கள். நீங்கள் கருத்து வேற்றுமை கொண்டிருந்ததைப் பற்றி (அவற்றில் எது தவறு, எது சரி என்பதை அது சமயம்) அவன் உங்களுக்கு அறிவிப்பான்.