caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-An'aam அத்தியாயம், வசனம் 125

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 55 · 6:125

فَمَن يُرِدِ ٱللَّهُ أَن يَهْدِيَهُۥ يَشْرَحْ صَدْرَهُۥ لِلْإِسْلَٰمِ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُۥ يَجْعَلْ صَدْرَهُۥ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِى ٱلسَّمَآءِ كَذَٰلِكَ يَجْعَلُ ٱللَّهُ ٱلرِّجْسَ عَلَى ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் எவரை நேர்வழி செலுத்த நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாமிற்கு விரிவாக்குகிறான். எவரை, அவன் வழிகெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவனைப் போல் இறுக்கமானதாகவும் சிரமமானதாகவும் ஆக்குவான். இவ்வாறே, நம்பிக்கை கொள்ளாதவர்கள் மீது அல்லாஹ் தண்டனையை ஆக்குவான்.
Tamil Translation - Omar Sharifஆக, அல்லாஹ் எவரை நேர்வழி செலுத்த நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாமை ஏற்பதற்கு விரிவாக்குகிறான். எவரை, அவன் வழிகெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவனைப் போல் இறுக்கமானதாகவும் சிரமமானதாகவும் ஆக்குவான். இவ்வாறே, நம்பிக்கை கொள்ளாதவர்கள் மீது அல்லாஹ் தண்டனையை ஆக்குவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi125. அல்லாஹ் எவர்களுக்கு நேர்வழி காண்பிக்க விரும்புகிறானோ அவர்களுடைய உள்ளத்தை இஸ்லாமின் பக்கம் (செல்ல) விரிவாக்குகிறான். எவர்களை, அவர்களுடைய வழிகேட்டிலேயே விட்டுவிட விரும்புகிறானோ அவர்களுடைய உள்ளத்தை (நிர்ப்பந்தத்தால்) வானத்தில் ஏறுபவ(னி)ன் (உள்ளம்) போல் கஷ்டப்பட்டு சுருங்கும்படியாக்கி விடுகிறான். இவ்வாறே, நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனை கொடுக்கிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70