caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hashr அத்தியாயம், வசனம் 10

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 101 · 59:10

وَٱلَّذِينَ جَآءُو مِنۢ بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا ٱغْفِرْ لَنَا وَلِإِخْوَٰنِنَا ٱلَّذِينَ سَبَقُونَا بِٱلْإِيمَٰنِ وَلَا تَجْعَلْ فِى قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ ءَامَنُوا۟ رَبَّنَآ إِنَّكَ رَءُوفٌ رَّحِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்களுக்கு (-முஹாஜிர், அன்சாரிகளுக்குப்) பின்னர் வந்தவர்கள் கூறுவார்கள்: எங்கள் இறைவா! எங்களையும் எங்களை ஈமானில் முந்திய எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! நம்பிக்கை கொண்டவர்கள் மீது குரோதத்தை (-பொறாமையை) எங்கள் உள்ளங்களில் ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! நிச்சயமாக நீதான் மகா இரக்கமுள்ளவன், மகா கருணையாளன்.
Tamil Translation - Omar Sharif(-முஹாஜிர்கள், அன்ஸாரிகள் ஆகிய) இ(ந்த இரு)வர்களுக்கும் பின்னர் வந்தவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களையும் ஈமானில் எங்களை முந்திய எங்கள் (முஹாஜிர், அன்ஸாரி) சகோதரர்களையும் மன்னிப்பாயாக! நம்பிக்கை கொண்டவர்கள் மீது குரோதத்தை (-பொறாமையை) எங்கள் உள்ளங்களில் ஏற்படுத்திவிடாதே! எங்கள் இறைவா! நிச்சயமாக நீதான் மகா இரக்கமுள்ளவன், மகா கருணையாளன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi10. எவர்கள் இவர்களுக்குப் பின் வந்தார்களோ, அவர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்களையும் நீ மன்னித்தருள்! எங்களுக்கு முன் நம்பிக்கை கொண்ட எங்கள் (முஹாஜிர், அன்சாரி) சகோதரர்களையும் மன்னித்தருள்! அந்த நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றி எங்கள் உள்ளங்களில் குரோதங்களை உண்டு பண்ணாதே! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக இரக்கமுடையவன், மகா கருணையுடையவன்'' என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருக்கின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70