caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Mujaadila அத்தியாயம், வசனம் 18

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 105 · 58:18

يَوْمَ يَبْعَثُهُمُ ٱللَّهُ جَمِيعًا فَيَحْلِفُونَ لَهُۥ كَمَا يَحْلِفُونَ لَكُمْ وَيَحْسَبُونَ أَنَّهُمْ عَلَىٰ شَىْءٍ أَلَآ إِنَّهُمْ هُمُ ٱلْكَٰذِبُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் அவர்கள் அனைவரையும் எழுப்பும் நாளில் அவனுக்கு முன் அவர்கள் சத்தியம் செய்வார்கள், உங்களுக்கு முன் அவர்கள் சத்தியம் செய்வது போன்று. (இந்த சத்தியத்தின் மூலம்) அவர்கள் (புத்திகூர்மையான) ஒரு செயலின் மீது நிச்சயமாக தாங்கள் இருப்பதாக எண்ணுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள்தான் பொய்யர்கள்!
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் அவர்கள் அனைவரையும் எழுப்பும் நாளில் (அந்த நரகத்தில் அவர்கள் நுழைவார்கள்). ஆக, அவர்கள் அவனுக்கு முன் சத்தியம் செய்வார்கள், உங்களுக்கு முன் அவர்கள் சத்தியம் செய்வது போன்று. (இந்த சத்தியத்தின் மூலம்) அவர்கள் (புத்தி கூர்மையான) ஒரு செயல் மீது நிச்சயமாக தாங்கள் இருப்பதாக எண்ணுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள்தான் பொய்யர்கள்!
Tamil Translation - Abdulhamid Baqawi18. அல்லாஹ் இவர்கள் அனைவரையும் (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளிலும் (இன்றைய தினம்) உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்ததைப் போன்று, அல்லாஹ்விடத்திலும் சத்தியம் செய்துவிட்டு, நிச்சயமாகத் தாங்கள் ஏதோ (தப்பித்துக் கொள்ளக்கூடிய ஒரு நல்ல) காரியத்தைச் செய்து விட்டதாகவும் எண்ணிக் கொள்வார்கள். மெய்யாகவே இவர்கள்தான் பொய்யர்களன்றோ!
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70