هُوَ ٱلَّذِى خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ فِى سِتَّةِ أَيَّامٍ ثُمَّ ٱسْتَوَىٰ عَلَى ٱلْعَرْشِ يَعْلَمُ مَا يَلِجُ فِى ٱلْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعْرُجُ فِيهَا وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنتُمْ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவன்தான் ஆறு நாள்களில் வானங்களையும் பூமியையும் படைத்தான். பிறகு, அர்ஷின் மீது அவன் உயர்ந்துவிட்டான். பூமியில் நுழைவதையும் அதிலிருந்து வெளியேறுவதையும் வானத்தில் இருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் நன்கறிவான். நீங்கள் எங்கு இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கின்றான். நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஅவன் ஆறு நாட்களில் வானங்களையும் பூமியையும் படைத்தான். பிறகு, அர்ஷின் மீது அவன் உயர்ந்துவிட்டான். பூமியில் நுழைவதையும் அதிலிருந்து வெளியேறுவதையும் வானத்தில் இருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் நன்கறிவான். இன்னும், நீங்கள் எங்கு இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi4. அவன்தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். பின்னர், அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தகுந்தாற்போல்) உயர்ந்து விட்டான். (வித்து முதலியவை) பூமியில் விதைக்கப்படுவதையும் அவை முளைத்து வெளிப்படுவதையும், வானத்தில் இருந்து இறங்குபவற்றையும், (பூமியிலிருந்து) ஏறுபவற்றையும் அவன் நன்கறிவான். நீங்கள் எங்கிருந்த போதிலும், அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றையும் (அந்த) அல்லாஹ் உற்று நோக்குகிறான்.