caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hadid அத்தியாயம், வசனம் 19

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 94 · 57:19

وَٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَرُسُلِهِۦٓ أُو۟لَٰٓئِكَ هُمُ ٱلصِّدِّيقُونَ وَٱلشُّهَدَآءُ عِندَ رَبِّهِمْ لَهُمْ أَجْرُهُمْ وَنُورُهُمْ وَٱلَّذِينَ كَفَرُوا۟ وَكَذَّبُوا۟ بِـَٔايَٰتِنَآ أُو۟لَٰٓئِكَ أَصْحَٰبُ ٱلْجَحِيمِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்பிக்கை கொண்டவர்கள் அவர்கள்தான் “ஸித்தீக்” என்ற மிக உண்மையானவர்கள் ஆவார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள், அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு அவர்களின் கூலியும் அவர்களின் ஒளியும் உண்டு. எவர்கள் நிராகரித்து, நமது வசனங்களை பொய்ப்பித்தார்களோ அவர்கள்தான் நரகவாசிகள் ஆவார்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், எவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்பிக்கை கொண்டார்களோ அவர்கள்தான் “ஸித்தீக்” (என்ற மிக உண்மையாளர்கள்) ஆவார்கள். இன்னும், (அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட) ஷுஹதா, அவர்களுக்கு அவர்களின் கூலியும் அவர்களின் ஒளியும் அவர்களின் இறைவனிடம் உண்டு. எவர்கள் நிராகரித்தார்களோ; இன்னும், நமது வசனங்களை பொய்ப்பித்தார்களோ அவர்கள்தான் நரகவாசிகள் ஆவார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi19. எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் மெய்யாகவே நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்கள்தான் ‘ஸித்தீக்' என்ற உண்மையாளர்கள். சன்மார்க்கப் போரில் உயிர்த்தியாகம் செய்த ‘ஷஹீது' என்பவர்கள் தங்கள் இறைவனிடத்தில் இருப்பார்கள். மேலும், அவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய கூலி (குறைவின்றி) உண்டு. (நேரான வழியை அறிவிக்கக்கூடிய) பிரகாசமும் உண்டு. எவர்கள் நம் வசனங்களை நிராகரித்துப் பொய்யாக்குகிறார்களோ, அவர்கள் நரகவாசிகள்தான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70