caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Hadid அத்தியாயம், வசனம் 12

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 94 · 57:12

يَوْمَ تَرَى ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَٰتِ يَسْعَىٰ نُورُهُم بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَٰنِهِم بُشْرَىٰكُمُ ٱلْيَوْمَ جَنَّٰتٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் (மறுமையில்) நீர் பார்ப்பீர், அவர்களின் ஒளி - (அவர்களின் நம்பிக்கை மற்றும் நல்ல அமல்களின் நன்மைகள்) அவர்களுக்கு முன்னர் செல்லும். அவர்களின் வலப்பக்கங்களில் (அவர்களின் செயலேடுகள் பறந்து கொண்டிருக்கும்). இன்று உங்கள் நற்செய்தி சொர்க்கங்களாகும். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அதுதான் மகத்தான வெற்றியாகும்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் (மறுமையில்) நீர் பார்ப்பீர், அவர்களின் ஒளி (-அவர்களின் நம்பிக்கை மற்றும் நல்ல அமல்களின் நன்மைகள்) அவர்களுக்கு முன்னர் செல்லும். இன்னும், அவர்களின் வலப்பக்கங்களில் (அவர்களின் செயலேடுகள் பறந்து கொண்டிருக்கும்). இன்று உங்கள் நற்செய்தி சொர்க்கங்களாகும். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அதுதான் மகத்தான வெற்றியாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi12. (நபியே!) நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் நீர் காணுகின்ற அந்நாளில், அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னும், அவர்களது வலப்பக்கத்திலும் சென்று கொண்டிருக்கும். (உண்மையான அவர்களின் நம்பிக்கையின் காரணமாக, வானவர்கள் அவர்களை நோக்கி:) ‘‘தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்கள் (உங்களுக்கு உண்டு) என்ற நற்செய்தி இன்று உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது. என்றென்றும் அதில் தங்கி விடுவீர்கள்'' என்று கூறுவார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70