caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Rahmaan அத்தியாயம், வசனம் 33

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 97 · 55:33

يَٰمَعْشَرَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ إِنِ ٱسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا۟ مِنْ أَقْطَارِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ فَٱنفُذُوا۟ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَٰنٍ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஜின் இன்னும் மனித சமூகத்தவர்களே! (அல்லாஹ்வின் தண்டனைகளில் இருந்து தப்பிக்க) வானங்கள், இன்னும் பூமியின் கோடிகளில் நீங்கள் விரண்டு ஓட உங்களால் முடிந்தால் ஓடுங்கள்! (அல்லாஹ்வின்) அதிகாரத்தை கொண்டே தவிர நீங்கள் ஓட முடியாது.
Tamil Translation - Omar Sharifஜின் இன்னும் மனித சமூகத்தவர்களே! (அல்லாஹ்வின் தண்டனைகளில் இருந்து தப்பிக்க) வானங்கள், இன்னும் பூமியின் ஓரங்களில் நீங்கள் விரண்டு ஓட உங்களால் முடிந்தால் ஓடுங்கள்! (அல்லாஹ்வின்) அதிகாரத்தை கொண்டே தவிர நீங்கள் ஓட முடியாது.
Tamil Translation - Abdulhamid Baqawi33. மனித, ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் இன்னும் பூமியின் எல்லையைக் கடந்து சென்றுவிட உங்களால் கூடுமாயின் அவ்வாறு சென்று விடுங்கள். ஆயினும், (அவற்றை ஆட்சி புரியக்கூடிய) மிகப் பெரும் பலத்தைக் கொண்டே தவிர நீங்கள் செல்ல முடியாது.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70