أَمْ لَهُمْ سُلَّمٌ يَسْتَمِعُونَ فِيهِ فَلْيَأْتِ مُسْتَمِعُهُم بِسُلْطَٰنٍ مُّبِينٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுக்கு ஓர் ஏணி இருந்து, அதில் (-அவர்கள் வானத்தில் ஏறிச்சென்று, அல்லாஹ்விடம் தங்களது கொள்கைதான் சரியானது என்று இறைவனின் வாக்கை நேரடியாக) அவர்கள் செவியுறுகின்றனரா? அப்படி இருந்தால் அவர்களில் செவியுற்றவர் தெளிவான ஓர் ஆதாரத்தை கொண்டு வரட்டும்.
Tamil Translation - Omar Sharifஅவர்களுக்கு ஓர் ஏணி இருந்து, அதில் (-அவர்கள் ஏறிச்சென்று, அல்லாஹ்விடம் தங்களது கொள்கைதான் சரியானது என்று இறைவனின் வாக்கை நேரடியாக) அவர்கள் செவியுறுகின்றனரா? ஆக, அப்படி இருந்தால் அவர்களில் (அல்லாஹ்வின் வாக்கை) செவியுற்றவர் தெளிவான ஓர் ஆதாரத்தை கொண்டு வரட்டும்.
Tamil Translation - Abdulhamid Baqawi38. அல்லது இவர்களுக்கு (வானத்தில் ஏறக்கூடிய) ஏணி இருந்து, அதில் (ஏறிச் சென்று, அங்கு நடைபெறும் பேச்சுகளைக்) கேட்டு வருகின்றனரா? அவ்வாறாயின், (அவற்றை) கேட்டு வந்தவர் (அதற்குத்) தெளிவான ஓர் ஆதாரத்தைக் கொண்டுவரவும்.