caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Qaaf அத்தியாயம், வசனம் 4

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 34 · 50:4

قَدْ عَلِمْنَا مَا تَنقُصُ ٱلْأَرْضُ مِنْهُمْ وَعِندَنَا كِتَٰبٌ حَفِيظٌۢ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களி(ன் உடல்களி)ல் பூமி குறைப்பதை (-தின்று அழித்துவிடுவதை) திட்டமாக நாம் அறிவோம். நம்மிடம் (நன்கு) பாதுகாக்கக்கூடிய பதிவு நூல் இருக்கிறது. (அதில் இவை எல்லாம் தெளிவாக பதியப்படுகிறது. அது மிக்க பாதுகாப்பானது.)
Tamil Translation - Omar Sharifஅவர்களி(ன் உடல்களி)ல் பூமி குறைப்பதை (-தின்று அழித்துவிடுவதை) திட்டமாக நாம் அறிவோம். (எழுதப்பட்ட செய்திகளை) பாதுகாக்கக்கூடிய பதிவு நூல் நம்மிடம் இருக்கிறது. (அதில் இவை எல்லாம் தெளிவாக பதியப்பட்டு மிக்க பாதுகாப்பாக இருக்கிறது.)
Tamil Translation - Abdulhamid Baqawi4. (மரணித்த)பின் அவர்களின் தேகத்தை மண் தின்று அழித்துக் கொண்டிருப்பதை நிச்சயமாக நாம் அறிவோம். (எனினும், நாம் விரும்பிய நேரத்தில் மரணித்த அவர்களை உயிர் கொடுத்து எழுப்பிவிடுவோம்.) மேலும், (அவர்களின் செயல்களைப் பற்றிய) பாதுகாக்கப்பட்ட பதிவுப் புத்தகம் நம்மிடத்தில் இருக்கிறது. (அதில் ஒவ்வொன்றும் வரையப்பட்டுள்ளது.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70