قَالَ قَرِينُهُۥ رَبَّنَا مَآ أَطْغَيْتُهُۥ وَلَٰكِن كَانَ فِى ضَلَٰلٍۭ بَعِيدٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவனுடைய நண்பன் (-மனிதனுடன் உலகில் இணைந்திருந்த ஷைத்தான்) கூறுவான்: எங்கள் இறைவா! நான் அவனை (உனது மார்க்கத்தை) மீறச் செய்யவில்லை. எனினும், அவன்தான் தூரமான வழிகேட்டில் இருந்தான்.
Tamil Translation - Omar Sharifஅவனுடைய நண்பன் (-உலகத்தில் மனிதனுடன் இணைந்திருந்த ஷைத்தான்) கூறுவான்: “எங்கள் இறைவா! நான் அவனை (உனது மார்க்கத்தை) மீறச் செய்யவில்லை. (நான் அவனை வழி கெடுக்கவில்லை.) எனினும், அவன் தூரமான வழிகேட்டில் இருந்தான்.”
Tamil Translation - Abdulhamid Baqawi27. (அச்சமயம்) இவனுடைய இணை பிரியாத சினேகிதன் (ஆக இருந்த ஷைத்தான் இறைவனை நோக்கி,) ‘‘என் இறைவனே! நான் இவனை வழிகெடுக்கவில்லை. தானாகவே அவன் வெகு தூரமான வழிகேட்டில் சென்றுவிட்டான்'' என்று கூறுவான்.