caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Qaaf அத்தியாயம், வசனம் 11

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 34 · 50:11

رِّزْقًا لِّلْعِبَادِ وَأَحْيَيْنَا بِهِۦ بَلْدَةً مَّيْتًا كَذَٰلِكَ ٱلْخُرُوجُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅடியார்களுக்கு உணவாக இருப்பதற்காக (இவற்றை நாம் முளைக்க வைத்தோம்). அதன் மூலம் (-மழைநீர் மூலம்) இறந்த பூமியை நாம் உயிர்ப்பிப்போம். இவ்வாறுதான் (மண்ணறையில் இருந்து உயிருடன் அடியார்கள்) வெளியேறுவதும் நடக்கும்.
Tamil Translation - Omar Sharifஅடியார்களுக்கு உணவாக (-வாழ்வாதாரமாக) இருப்பதற்காக (இவற்றை நாம் முளைக்க வைத்தோம்). இன்னும், அதன் மூலம் (-மழைநீர் மூலம்) இறந்த பூமியை நாம் உயிர்ப்பிப்போம். இவ்வாறுதான் (மண்ணறையில் இருந்து உயிருடன் அடியார்கள்) வெளியேறுவதும் நடக்கும்.
Tamil Translation - Abdulhamid Baqawi11. அதை (நம்) அடியார்களுக்கு உணவாக்கி, அவற்றைக்கொண்டு இறந்த பூமியை நாம் உயிர்ப்பிக்கிறோம். இவ்வாறே (மரணித்தவர்கள் சமாதிகளில் இருந்து) வெளியாகுவதும் ஏற்படும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70