فَأَثَٰبَهُمُ ٱللَّهُ بِمَا قَالُوا۟ جَنَّٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ خَٰلِدِينَ فِيهَا وَذَٰلِكَ جَزَآءُ ٱلْمُحْسِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அவர்கள் கூறியதன் காரணமாக, அதன்கீழ் நதிகள் ஓடுகிற சொர்க்கங்களை அல்லாஹ் அவர்களுக்குப் பிரதிபலனாக அளித்தான். அதில் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். இது நல்லறம்புரிபவர்களுடைய கூலியாகும்.
Tamil Translation - Omar Sharifஆகவே, அவர்கள் (இவ்வாறு) கூறியதன் காரணமாக, சொர்க்கங்களை அல்லாஹ் அவர்களுக்கு கூலியாக வழங்கினான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவற்றில் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். இன்னும், இதுதான் (சத்தியத்தை ஏற்று) முஹ்சின்[1] - நல்லறம் புரிபவர்களுடைய கூலியாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi85. அவர்கள் இவ்வாறு கூறுவதன் காரணமாக, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களை அல்லாஹ் அவர்களுக்குப் பிரதிபலனாக அளிப்பான். அவற்றில் அவர்கள் (என்றென்றும்) தங்கிவிடுவார்கள். இதுவே நன்மை செய்பவர்களுக்குரிய கூலியாகும்.