caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Maaida அத்தியாயம், வசனம் 83

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 112 · 5:83

وَإِذَا سَمِعُوا۟ مَآ أُنزِلَ إِلَى ٱلرَّسُولِ تَرَىٰٓ أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ ٱلدَّمْعِ مِمَّا عَرَفُوا۟ مِنَ ٱلْحَقِّ يَقُولُونَ رَبَّنَآ ءَامَنَّا فَٱكْتُبْنَا مَعَ ٱلشَّٰهِدِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionதூதருக்கு இறக்கப்பட்டதை அவர்கள் செவியுற்றால், உண்மையை அவர்கள் அறிந்த காரணத்தினால் அவர்களின் கண்களை அவை கண்ணீரால் நிரம்பி வழியக்கூடியதாகக் காண்பீர். "எங்கள் இறைவா! (இத்தூதரையும் இவ்வேதத்தையும்) நம்பிக்கை கொண்டோம். ஆகவே, சாட்சியாளர்களுடன் எங்களை(யும்) பதிவு செய்!” என்று கூறுகின்றனர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், இந்த தூதருக்கு இறக்கப்பட்டதை அ(ந்த கிறித்த)வர்கள் செவியுற்றால், உண்மையை அவர்கள் அறிந்த காரணத்தினால் அவர்களின் கண்கள் அவை கண்ணீரால் நிரம்பி வழியக்கூடியதாக இருப்பதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! (இத்தூதரையும் இவ்வேதத்தையும்) நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, சாட்சியாளர்களுடன் (-முஸ்லிமான இந்த சமுதாயத்துடன்) எங்களை(யும்) பதிவு செய்!’’ என்று அவர்கள் கூறுகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi83. தவிர, (இவர்களில் பலர் நம்) தூதர் மீது அருளப்பட்டவற்றை செவியுற்றால், உண்மையை அவர்கள் உணர்வதன் காரணமாக அவர்களின் கண்கள் (தாரை தாரையாக) கண்ணீர் வடிப்பதைக் காண்பீர் “எங்கள் இறைவனே! (இவ்வேதத்தை) நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, (இவ்வேதம் உண்மையானதென) சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!'' என்றும் (பிரார்த்தித்துக்) கூறுகின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70