وَٱلسَّارِقُ وَٱلسَّارِقَةُ فَٱقْطَعُوٓا۟ أَيْدِيَهُمَا جَزَآءًۢ بِمَا كَسَبَا نَكَٰلًا مِّنَ ٱللَّهِ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionதிருடன், திருடி அவர்கள் செய்ததற்கு கூலியாக, அல்லாஹ்விடமிருந்து தண்டனையாக அவ்விருவரின் கரங்களை வெட்டுங்கள். அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், எந்த ஆண் திருடுகிறானோ, எந்த பெண் திருடுகிறாளோ அவ்விருவரும் செய்ததற்கு கூலியாக, அல்லாஹ்விடமிருந்து தண்டனையாக அவ்விருவரின் (வலது) கரங்களை (மணிக்கட்டு வரை) வெட்டுங்கள். அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi38. ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் (இத்) தீயச் செயலுக்குத் தண்டனையாக அவர்களின் கைகளைத் துண்டித்து விடுங்கள். (இது) அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட தண்டனை ஆகும். அல்லாஹ் மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான்.